Apple Care Pharmacy

நன்மை தரும் பலன்


தூக்கம்
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:10pm (UTC)
 கசகசா கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர தூக்கம் நன்கு வரும்.
 

ரத்த உற்பத்தி
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:09pm (UTC)
 கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
 

தழும்பு மறையும்
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:07pm (UTC)
 சிலருக்கு குங்குமம் வைக்கும் இடத்தில் கருப்பு தழும்பு ஏற்படும்.துளசி இலையை தேங்காய்பால் விட்டு அரைத்து அந்த இடத்தில் தடவினால் கருப்பு தழும்பு மறைத்துவிடும்
 

உள்நாக்கு வளர்ச்சி
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:05pm (UTC)
 உப்பு,தயிர் ,வெங்கையக் கலவையை பயன்படுத்தினால் உள்நாக்கு வளர்ச்சி தடைபடும்
 

தேமல்
Apple Care Pharmacy on 07/31/2017 at 6:04pm (UTC)
 வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
 

வெள்ளை தோல்
ஆப்ப்ள் மெடிக்கல் on 07/31/2017 at 6:03pm (UTC)
 உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. மேலும் இதனை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாது. ஏனெனில் இதில் அமிலமானது அளவாக உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை வெட்டி, அதனைக் கொண்டு அக்குளை 5-10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கருமையானது விரைவில் நீங்கும். எலுமிச்சை உருளைக்கிழங்கை விட, எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். அதிலும் இதனை எப்போதும் தனியாக பயன்படுத்தக்கூடாது. மாறாக ஏதேனும் ஒரு பொருளுடன் சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும். அதிலும் தினமும் குளிக்கும் முன், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, அக்குளை தேய்த்து, 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். மேலும் குளித்து முடித்த பின்னர், ஏதேனும் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். தயிர் தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயிலும் உருளைக்கிழங்கில் உள்ளது போன்ற ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அதுமட்டுமின்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். அத்தகைய வெள்ளரிக்காயை தினமும் வெட்டி, அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும் அல்லது வெள்ளரிக்காய் சாற்றில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதனை அக்குளில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். ஆரஞ்சு தோல் எலுமிச்சையைப் போன்றே ஆரஞ்சிற்கும் கருமையைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அத்துடன் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 

<- Back  1  2  3  4  5 Continue -> 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free